நாளை முதல் டெல்லியில் வழிபாட்டு தலங்கள், உணவு விடுதிகள் திறக்கப்படும்-முதல்வர்

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்கள், உணவு விடுதிகள் திறக்கப்படும். எனினும் ஓட்டல்கள், விருந்து அரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

டெல்லி மாநில எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும். ஜூன் மாத இறுதிக்குள் டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 15 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும். டெல்லியில் உள்ள மருத்துவமனைகள், டெல்லி வாழ் மக்களுக்காக மட்டுமே செயல்படும். மத்திய மருத்துவமனைகள் அனைவருக்காகவும் தொடர்ந்து செயல்படும்.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியோர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் பிறரிடம், குறிப்பிடும்படியாக குழந்தைகளிடம் குறைவாக பேச வேண்டும். நீங்கள், உங்களது வீட்டில் தனியறையில் இருங்கள். ஏனெனில் கொரோனா வைரஸ் முதியோர்களை பாதிக்கும் ஆபத்து அதிகம் என கூறியுள்ளார்.

Spread the love

Leave a Reply