டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து அமித்ஷா இன்று ஆலோசனை

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கவர்னர் அனில் பைசால், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குளேரியா மற்றும் மாநில பேரிடர் மீட்பு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். நோய் பாதிப்பு, நோயை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த தகவலை மத்திய மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply