சிறப்புரயில்களில் பயணிக்க இ-பாஸ் அவசியம்: தெற்கு ரயில்வே

சென்னை: நாளை முதல் தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கோவை-காட்பாடி, கோவை-மயிலாடுதுறை, மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில் ஆகிய நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று நாளை முதல் நான்கு வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் இந்த ரயில்களில் பயணிப்பதற்கான முன்பதிவும் துவங்கி விட்டன.

இதனிடையே மத்திய அரசும் தமிழக அரசும் 5-ம் கட்ட ஊரடங்கை பிறப்பித்து உள்ளன அதில் தமிழக அரசு சென்னை செங்கலபட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டஙகளை தவிர ஏனைய மாவட்டங்கள் மண்டலங்களா பிரித்துள்ளன. மண்டலங்களுக்குள் மட்டும் பஸ்கள்இயக்கப்படும் எனவும் இதற்கு இ பாஸ் தேவையில்லை என தெரிவித்து உள்ளது.மேலும் மண்டலம் விட்டு மண்டலம் பஸ்கள் இயக்கப்பட மாட்டாது எனவும் அரசு தெரிவித்து உள்ளது.

இதனிடையே நாளை முதல் தமிழகத்தில் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களில் பயணிப்போரும் இ -பாஸ் பெற்றிருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. சிறப்பு ரயில்கள் அனைத்தும் ஒரு மண்டலத்தில்இருந்து மற்ற மண்டலபகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் தெற்கு ரயில்வே இ பாஸ் தேவை என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Leave a Reply