கேரளாவில் புதிதாக 91 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,095 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கான பலி இதுவரை 16 ஆக உள்ளது.

இதில் 51 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், 27 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். மீதமுள்ள 11 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதில் சுகாதாரப் பணியாளர்களும் அடக்கம். கேரளாவில் இதுவரை மொத்தம் 848 பேர் குணமடைந்தனர். கட்டுப்பாட்டு பகுதிகள் புதிதாக 10 பகுதிகள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவற்றின் மொத்த எண்ணிக்கை 158 ஆக உள்ளது.

Spread the love

Leave a Reply