ஒரு வாரத்திற்கு டில்லி எல்லைகள் மூடல்: டெல்லி முதல்வர்

புதுடில்லி ; டில்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு மாநில எல்லைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், டில்லியில், சலூன்கள் மற்றும் கடைகளை திறக்கலாம். ஆனால், அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

டில்லியின் எல்லைகள் அடுத்த வாரம் சீல் வைக்கப்படும். அடிப்படை சேவைகள், மற்றும் பயணத்திற்கான அரசு அனுமதித்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே டில்லிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மாநில எல்லைகளை திறப்பது குறித்து மக்கள், தங்களது ஆலோசனையை வழங்கலாம். எல்லைகளை திறந்த உடன், பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சிகிச்சைக்காக டில்லியில் குவிந்து விடுவார்கள். டில்லி வாசிகளுக்கு சிகிச்சை அளிக்க டில்லி மருத்துவமனைகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
டில்லியில் வசிப்போரின் குடும்பத்தில் யாருக்காவது வைரஸ் தொற்று இருக்கிறது என்றால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவமனை படுக்கை இருக்கும் என்பதை முதல்வராக உறுதி கூறுகிறேன். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Spread the love

Leave a Reply