எல்லையருகே பறந்த சீன போர் விமானங்கள்: இந்திய படை கண்காணிப்பு

லடாக்: எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து இருந்து 30-35 கி.மீ., தொலைவில் சீன போர் விமானங்கள் பறந்து சென்றன. இதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், சீனாவின் எல்லையில் உள்ள ஹோடன் மற்றும் கர்குன்சா விமான படை தளங்களில் 10 முதல் 12 போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. தினசரி இந்திய எல்லை அருகே பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஹோடன் மற்றும் கர்குன்சாவில் இருந்து பயிற்சிக்கு கிளம்பும் சீன போர் விமானங்கள், லடாக் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே 30 – 35 கி.மீ., தொலைவில் பறந்து செல்கின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லை பகுதியில் இந்திய சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அருகருகே பறந்து சென்றதை தொடர்ந்து மே முதல்வாரத்தில் அந்த பகுதிக்கு சுகோய் 30 ரக போர் விமானங்களை இந்தியா அனுப்பி வைத்தது.
ஹோடன் போர் தளத்தில், கடந்த காலங்களில் பாகிஸ்தான் விமானப்படையினரும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால், அதனை இந்திய உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியின் இரு பகுதிகள், மற்றும் கல்வன் நாலா உள்ளிட்ட சீனாவின் நிலைகள் குறித்து கண்காணிக்க, இந்திய பாதுகாப்பு படையினர், ஆளில்லா போர் விமானங்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

Spread the love

Leave a Reply