இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு விமான சேவை: லுப்தான்சா குழுமம் விருப்பம்

புதுடெல்லி,

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கிய போதிலும், சர்வதேச விமான சேவை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதனால், இந்தியாவில் தங்கி உள்ள வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், தாங்கள் குடியிருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இந்நிலையில், ஜெர்மனியை சேர்ந்த லுப்தான்சா விமான குழுமம், விமானங்களை இயக்க முன்வந்துள்ளது.

ஆனால், இந்தியாவுக்கு வரும்போது காலியாக விமானங்களை கொண்டு வந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது மட்டும் பயணிகளை ஏற்றிச்செல்ல விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த யோசனையை ஏற்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Spread the love

Leave a Reply