‘ரபேல்’ போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த காலதாமதமும் ஏற்படாது

புதுடில்லி: ‘கொரோனா பரவலால், ‘ரபேல்’ போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த காலதாமதமும் ஏற்படாது’ என, பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளோரன்ஸ் பார்லி உறுதிஅளித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான, பிரான்சின் ராணுவ அமைச்சர் பார்லியுடன், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று முன்தினம் டெலிபோனில் பேசினார். இது பற்றி, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்களை, இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது.

கொரோனா பரவலால், உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி வழங்கப்படும்; இதில், எந்த காலதாமதமும் ஏற்படாது என, ராஜ்நாத் சிங்கிடம், பார்லி உறுதியளித்தார்.

அக்டோபர் மாதத்தில், முதல் ரபேல் விமானம், இந்தியா வந்தடையும் என, அவர் தெரிவித்தார். இரு தரப்பு ராணுவ உறவுகளை பலப்படுத்த, இருவரும் சம்மதம் தெரிவித்தனர். இந்திய பெருங்கடல் பகுதியில், இரு நாடுகளும் இணைந்து, ராணுவ பயிற்சியில் ஈடுபட, அமைச்சர்கள் இருவரும் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Spread the love

Leave a Reply