யானையை கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை: பினராயி

புதுடில்லி: கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரிடம் விசாரணை நடக்கிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில், பாலக்காடு மாவட்டம் மலப்புரத்தில் உள்ள, வெள்ளியார் ஆற்றில் கர்ப்பிணி யானை அன்னாசி பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது. நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரிடம் விசாரணை நடப்பதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் கூறியது, பாலக்காடு மாவட்டத்தில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணையை நடந்து வருகிறது. குற்றவாளிகள் நீதிக்கு முன்னால் நிறுத்தப்படுவர். இதற்கானஅனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொள்ளும் என்றார்.

Spread the love

Leave a Reply