தெலுங்கானாவில் ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா

ஐதராபாத் : கொரோனா பாதிப்புகள் அதிகரித்து தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 99 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,891 ஆக அதிகரித்தது. புதிதாக 4 பேர் பலியானதை தொடர்ந்து மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்தது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 87 பேர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும், மற்ற 12 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒரே நாளில் 35 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,526 ஆக உள்ளது. மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,273 ஆக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply