திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு கொரோனா

சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 208 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக எம்.எல்.ஏ., ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி, திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு(61) கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர், குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் அவர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Leave a Reply