சென்னையில் இன்று 1,072 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் இன்று 1,072 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,609 ஆக அதிகரித்துள்ளது. இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேருக்கும், திருவள்ளூரில்44 பேருக்கும், காஞ்சிபுரம் விருதுநகரில் தலா 8 பேருக்கும், விழுப்புரம், திருச்சி, தூத்துக்குடி, மதுரையில் தலா 7 பேருக்கும், கடலூர், நாகையில் தலா 5 பேருக்கும், தி.மலை , ராணிப்பேட்டையில் தலா 4 பேருக்கும், ராமநாதபுரம், தேனி, வேலூரில் தலா 3 பேருக்கும், திருநெல்வேலி, தென்காசி, சேலம், புதுக்கோட்டை, நாமக்கல், தர்மபுரி, அரியலூரில் தலா இருவருக்கும், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சிவகங்கையில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியானது.
கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 10 பேரும், செங்கல்பட்டு, வேலூரில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபரங்கள் பின்வருமாறு

 

 

 

 

 

Spread the love

Leave a Reply