கொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு

திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55 வயதான பத்திரிகையாளர் ஒருவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார், மேலும் மூன்று பேர் இறந்தனர். வைராவிகுளம், அகஸ்தியர்பட்டியில் உள்ள ஆரம்பசுகாதார நிலையங்களில் நர்ஸ் உள்ளிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. பேட்டையில் மின்வாரியத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது, இன்று 207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில். மாவட்டத்தில் தற்போது 1458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

துாத்துக்குடியில் இன்று 317 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 307 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தற்போது 2366 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் பலியானார். தென்காசியில் இன்று 99 பேருக்கு தொற்று உறுதியானது. 387 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், 760 பேர் சிகிச்சையில்
உள்ளனர். ஒருவர் பலியானார்.

Spread the love

Leave a Reply