உ.பி., பீஹாருக்கு 80 சதவீத ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதுடில்லி : ஊரடங்கால் சிக்கி தவித்த வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் உ.பி., மற்றும் பீஹாரை சேர்ந்த 80 சதவீதமான தொழிலாளர்கள் பயனடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கால் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட மத்திய மற்றும் மாநில அரசுகள் ஷ்ராமிக் ரயில்கள் மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பலனடைந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்துக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக, ஷ்ராமிக் ரயில்களால் அழைத்து வர நடடிக்கை எடுக்கப்பட்டு வருதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 80 சதவீதத்தினர் உ.பி., மற்றும் பீஹாரை சேர்ந்தவர்கள் என ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்தார். இது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் கூறுகையில், வெளி மாநில தொழிலாளர் களின் கோரிக்கை மற்றும் பாதுகாப்பை ஏற்று, மே.,01 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த ரயில்களால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 54 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இந்த ரயில்களில் அதிக அளவு பீஹார் மற்றும் உ.பி மாநில தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது தொழிலாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட அரசு அறிவுறுத்தியது. அத்துடன் பயண நேரங்களில் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை அதிகாரிகள் வழங்கினர். சொந்த ஊர்களுக்கு திரும்பியதும் பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பு காரணத்திற்காக தனிமைப்படுத்தப்படுவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Spread the love

Leave a Reply