அத்தியாவசிய பொருள் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல்

புதுடில்லி: அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டன்ர. கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதையடுத்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது, விவசாயிகளின் நலனுக்காக ஒரு நாடு ஒரே சந்தை ஏற்படுத்தும் வகையில், அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும், மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா துறைமுகம், ஷியாம பிரசாத் முகர்ஜி என பெயர் மாற்றம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Spread the love

Leave a Reply