தமிழகத்தில் 4 வழித்தடத்தில் நாளை முதல் சிறப்பு ரயில்கள்

சென்னை : -தமிழகத்தில், நான்கு வழித்தடங்களில், நாளை முதல் தினமும், எட்டு, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு, நேற்று மாலை, 4:00 மணிக்கு துவங்கியது. கோவை — மயிலாடுதுறை இடையே, ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், 02084 என்ற எண்ணில், கோவையில் இருந்து, காலை, 7:10க்கு புறப்பட்டு, மயிலாடுதுறைக்கு, மதியம், 1:40 மணிக்கு சென்றடையும் மயிலாடுதுறையில் இருந்து, 02083 என்ற எண்ணில், மதியம், 2:50க்கு புறப்பட்டு, இரவு, 9:15 மணிக்கு, கோவை ஜங்ஷன் நிலையம் சென்றடையும். இந்த இரு ரயில்களும், வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர, மற்ற நாட்களில் இயக்கப்படும் மதுரை – – விழுப்புரம் இடையே, தினமும் இன்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், 02636 என்ற எண்ணில், மதுரையில் இருந்து, காலை, 7:00க்கு புறப்பட்டு, விழுப்புரத்துக்கு நண்பகல், 12:05 மணிக்கு செல்லும்  விழுப்புரத்தில் இருந்து, 02635 என்ற எண்ணில், மாலை, 4:00க்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு, 9:20 மணிக்கு செல்லும்  திருச்சி — நாகர்கோவில் இடையே, தினமும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், -02627 என்ற எண்ணில், திருச்சியில், காலை, 6:00க்கு புறப்பட்டு, மதியம், 1:00 மணிக்கு நாகர்கோவில் செல்லும்  நாகர்கோவிலில் இருந்து, 02628 என்ற எண்ணில், மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு, இரவு, 10:15க்கு செல்லும் * கோவை – – காட்பாடி இடையே, தினமும் இன்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், 02680 என்ற எண்ணில், கோவையில் இருந்து, காலை, 6:15க்கு புறப்பட்டு, காட்பாடிக்கு, 11:50 மணிக்கு சென்றடையும் காட்பாடியில் இருந்து, 02679 என்ற எண்ணில், மாலை, 4:20க்கு புறப்பட்டு, கோவைக்கு, இரவு, 10:15 மணிக்கு செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். இந்த ரயில்கள் நின்று செல்லும், நிலையங்களில் உள்ள, டிக்கெட் கவுன்டர்களிலும் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு நேற்று மாலை, 4:00 மணிக்கு துவங்கியது.கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, இணையதளத்தில் முன்பதிவு செய்வது நல்லது என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

Spread the love

Leave a Reply