ரஜினி, கமல் நடித்த ‘அவள் அப்படித்தான்’ ரீமேக்கில் ஸ்ருதி ஹாசன்

‘அவள் அப்படித்தான்’ – 1978ல் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் இது. அப்போதே பெண்ணியவாதம் பற்றி பேசிய படம் இது. ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மசாலா படங்கள் மீதான ஈர்ப்பில் இருந்ததால் இந்த படத்திற்க்கு அப்போது பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காமல் போனது என்று கூறப்படுவதுண்டு.
சி.ருத்ரைய்யா இயக்கிய இந்த படத்தை தற்போது ரீமேக் செய்யும் முயற்சியில் களமிறங்கி இருக்கிறார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். அவர் அதர்வா நடிப்பில் பானா காத்தாடி, செம போத ஆகாதே ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது உள்ள ரசிகர்களுக்கு தகுந்தாற்போல கதையில் மாற்றங்களை செய்து படத்தை இயக்க அவர் முடிவெடுத்துள்ளார்.

அவள் அப்படித்தான் படத்தின் ரிமேக்கில் ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார் என பத்ரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அவர் ஸ்ரீப்ரியா நடித்த மஞ்சு என்கிற ரோலில் தான் நடிக்கவுள்ளார். அது மட்டுமின்றி ரஜினி-கமல் வேடத்தில் நடிக்க சிம்பு மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என நேற்று செய்தி பரவியது.

இது பற்றி கேட்டதற்கு துல்கருக்கு செய்தி அனுப்பியுள்ளேன் ஆனால் இன்னும் பேசவில்லை, சிம்புவை இன்னும் அனுகவில்லை. இந்த படத்தின் மெயின் ரோலில் நடிக்க துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா அகியோர் நடிக்கலாம் என பத்ரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
“இது துவங்கியது ஒரு social media challengeல் தான். எனக்கு தற்போதும் அவள் அப்படித்தான் படத்தின் மீது உள்ள ஈர்ப்பு பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அதில் ஸ்ருதி ஹாசன் பெயரையும் குறிப்பிட்டு இருந்தேன்.”

“நான் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். இந்த இன்ஸ்டிடியூட்டில் படித்து முதல் முறையாக படம் இயக்கியது சி.ருத்ரையா தான். அதனால் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது இந்த படம். அதற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கிறது.”

“நான் ஸ்ருதி ஹாசன் உடன் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியில் பணியாற்றி இருந்தேன். அப்போது அவரிடம் ‘அவள் அப்படித்தான்’ படம் பற்றி பேசி இருந்தேன். நான் கேட்டுக்கொண்டதற்காக அந்த படத்தை மீண்டும் பார்த்தார் ஸ்ருதி ஹாசன். தற்போதும் இருக்கும் பல பிரச்சனைகள் பற்றி பேசியிருந்தது அந்த படம். அதை ரீமேக் செய்ய வேண்டும் என நான் விரும்புவதாக கூறினேன். ஸ்ருதி ஹாசனுக்கு அந்த ஐடியா பிடித்திருந்தது. தற்போது ஒரு தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார்.”
“ஆனால் தற்போது ஒரு சிக்கல் உள்ளது. இந்த படத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என தெரியவில்லை. ருத்ரையா தற்போது உயிருடன் இல்லை. அவரது மகள் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். ஆனால் அவருக்கும் அது பற்றி தெரியுமா என உறுதியாக தெரியவில்லை. ”

“அந்த படத்தை நான் காட்சிக்கு காட்சி ரீமேக் செய்ய போவதில்லை. ஆனால் எந்த தடையும் இல்லாமல் இந்த படத்தை எடுக்க விரும்புகிறேன்” என தெரிவித்து உள்ளார் பத்ரி வெங்கடேஷ்.

மேலும் இந்த ரீமேக் படத்தின் இசையமைப்பாளர் யார் என கேட்டதற்கு, “எனது எல்லா படங்களிலும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்து உள்ளார். ஆனால் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Spread the love

Leave a Reply