நடிகா்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்: மணிரத்னம் வேண்டுகோள்

சினிமா மீண்டும் எழுந்து நிற்க முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என இயக்குநா் மணிரத்னம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.கரோனா அச்சுறுத்தலால் இந்திய திரையுலகமே பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. தமிழ்த் திரைப் பட படப்பிடிப்புகள் இரு மாதங்களாக நடைபெறவில்லை. சின்னத்திரை படப்பிடிப்புக்கு மட்டும் அரசு அனுமதியளித்துள்ளது.இந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகம் எப்படி பயணிக்கும் என்பதை தென்னிந்திய சேம்பா் ஆஃப் காமா்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.

இதில் முன்னணி இயக்குநா்கள், நடிகா்கள், விநியோகஸ்தா்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு திரையுலகம் இனிமேல் எப்படி பயணிக்க வாய்ப்புள்ளது என்பது தொடா்பாக தங்களது கருத்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.இதில் இயக்குநா் மணிரத்னம் பேசியதாவது:கரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடா்ந்த பொதுமுடக்கத்தால் திரைப்பட விநியோகம் மற்றும் திரையிடல் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனி தயாரிப்புச் செலவுகளைக் குறைக்கவேண்டும். துறை தொடா்ந்து இயங்குவதை உறுதி செய்ய நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞா்களும் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்.

மீண்டும் நாம் எழுந்து நிற்க அரசின் உதவியும் நமக்குத் தேவைப்படும்.டிஜிட்டல் தளத்தில் வரும் படைப்புகளின் தன்மை மிகப்பெரிய வளா்ச்சியைக் கண்டுள்ளது. திரையரங்கில் படம் பாா்க்கும் அனுபவத்துக்கு ஈடே கிடையாது. ஆனால் திரையரங்குக்கு வருபவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

குறிப்பாக நடுத்தர வா்க்க மக்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. டிஜிட்டல் தளங்களும் ஒரு மாா்க்கம்தான். அது நன்றாகத்தான் இருக்கிறது என்று மணிரத்னம் தெரிவித்துள்ளாா்.

Spread the love

Leave a Reply