தொழில் அதிபரை மணக்கும் விக்ரம் பட நடிகை

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மியா ஜார்ஜ். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படத்துள்ள மியாவுக்கு நடிப்பின் மீதான ஈர்ப்பால் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமான மியா கடந்த 2012ம் ஆண்டு வெளியான சேட்டாயீஸ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த மியா கடந்த 2014ம் ஆண்டு வெளியான அமர காவியம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அமர காவியம் படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா தான் ஹீரோ. விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை, சசிகுமாரின் வெற்றிவேல், தினேஷின் ஒரு நாள் கூத்து, ரம், விஜய் ஆண்டனியின் எமன் ஆகிய தமிழ் பங்களில் நடித்துள்ளார்.

இமைக்கா நொடிகள் படம் புகழ் அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து இயக்கியிருக்கும் கோப்ரா படத்தில் மியா ஜார்ஜ் நடித்துள்ளார். மியாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மியாவுக்கும், அஸ்வின் பிலிப் என்கிற தொழில் அதிபருக்கும் சத்தமில்லாமல் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

அஸ்வின் வீட்டில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டார்களாம். நிச்சயதார்த்த தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாம். லாக்டவுனால் நிச்சயதார்த்ததை தள்ளி வைக்க மனம் இல்லாமல் சத்தமில்லாமல் நடத்தினார்களாம். மியா, அஸ்வின் திருமணத்தை வரும் செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Spread the love

Leave a Reply