டிஜிட்டலில் வெளியாகும் மேலும் 2 படங்கள்

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி டிஜிட்டல் தளத்தில் வெளியானது. அடுத்து கீர்த்தி சுரேசின் பெண்குயின், இந்தியில் அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிடோபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி, கன்னடத்தில் உருவான பிரெஞ்சு பிரியாணி, மலையாளத்தில் தயாரான சூவியும் சுஜாதாவும் ஆகிய படங்கள் இணைய தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்தியில் உருவான விர்ஜின் பானுப்ரியா. தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தயாரான கிளைமேக்ஸ் ஆகிய படங்களும் இணைய தளத்தில் வருகின்றன. இந்த நிலையில் தமிழில் தயாராகி உள்ள ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்‘, அந்தகாரம் ஆகிய மேலும் 2 படங்கள் இணைய தளத்துக்கு வருகின்றன. அந்தகாரம் படத்தை இயக்குனர் அட்லி தயாரித்துள்ளார். அர்ஜூன்தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிடுவதை உறுதி செய்துள்ளனர். டைட்டானிக்: காதலும் கவுந்துபோகும் படத்தில் கலையரசன், ஆனந்தி, ராகவ் விஜய், ஆஷ்னா சவேரி, காளிவெங்கட், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். ஜானகிராமன் இயக்கி உள்ளார். இந்த படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது.

Spread the love

Leave a Reply