சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பங்கேற்க அனுமதி
சென்னை : சின்னத்திரை படப் பிடிப்பை, அதிக பட்சமாக, 60 நடிகர் – நடிகையர், தொழில்நுட்ப பணியாளர் களுடன், இன்று முதல் நடத்த அனுமதி அளித்து, முதல்வர் திரு. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தென் மாநில திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன், சின்னத்திரை படப்பிடிப்பை துவக்க, மே, 21ல் அனுமதி அளிக்கப்பட்டது. அனுமதி அளிக்கப்பட்டபடி, 20 நடிகர் – நடிகையர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுடன், படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது. அதை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என, செய்தித்துறை அமைச்சரை சந்தித்து, கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, அதிகபட்சமாக, 60 நடிகர் – நடிகையர், தொழில்நுட்ப பணியாளர்கள் உதவியுடன், சின்னத்திரை படப்பிடிப்பை, இன்று முதல் அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.கட்டுப்பாடுசென்னையில் படப்பிடிப்பு நடத்த, மாநகராட்சி கமிஷனரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடமும், தொடரின் முழு படப்பிடிப்பிற்கும், ஒரு முறை மட்டும், முன் அனுமதி பெற வேண்டும்.சின்னத்திரை படப்பிடிப்பில் பங்கேற்போர் அனைவரும், மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும், அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல், பின்பற்ற வேண்டும்.சின்னத்திரை தயாரிப்பாளர்கள், அதை உறுதி செய்து, படப்பிடிப்புகள் நடத்த வேண்டும். இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.