அம்மா ஆகிறார் மைனா நந்தினி

சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்கிற கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நந்தினி. அந்த கேரக்டர் பிரபலமானதால் அவரது பெயரே மைனா நந்தினி என்று ஆனது. அதற்கு பிறகு அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், சின்னத் தம்பி என பல சீரியல்களில் அவர் நடித்துவிட்டார். வம்சம், ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் காமெடி வேடங்கிலும் நடித்துள்ளார் அவர் சென்னையில் ஜிம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்துவிட்டார். கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு கடந்த ஆண்டு சின்னத்திரை நடிகர் நடிகர் யோகேஸ்வரனை திருமணம் செய்து கொண்டார். விரைவில் நந்தினி அம்மாவாக போகிறார். சமீபத்தில் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை பதிவிட்டிருந்தார் நந்தினி. அதில் அவரது வயிறு பெரிதாக தெரிந்ததால் ரசிகர்கள் கேள்வி எழுப்ப… “ஆம் நான் அம்மா ஆக போகிறேன். இப்போது மாதம் 5” என்று கூறியிருக்கிறார்.

Spread the love

Leave a Reply