அஜித் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு நிலவரம் குறித்து போனி கபூர் தகவல்

அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – நிரவ் ஷா.போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழ்த் திரையுலகினருக்குத் தமிழக அரசு அனுமதி தந்துள்ளது. இதனால் படப்பிடிப்புப் பணிகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி வலிமை படம் தொடர்பான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் எனத் தயாரிப்பாளர் போனி கபூருக்கு அஜித் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா வைரஸின் பாதிப்பு குறைந்த பிறகு போஸ்ட் புரொடக்‌ஷன் உள்ளிட்ட வலிமை படம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம்.

தற்போது வலிமை படத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பாதுகாப்பே நமக்கு முக்கியம் என போனி கபூர், இயக்குநர் வினோத் ஆகியோரிடம் அஜித் கூறியதாகவும் அதற்கு இருவரும் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வலிமை படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் ஒரு பேட்டியில் வலிமை படம் பற்றி தயாரிப்பாளர் போனி கபூர் பேசியதாவது:பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கை எடுத்ததுபோல தெலுங்கிலும் Vakil Saab என்கிற பெயரில் படம் உருவாகி வருகிறது. இரு வருடங்கள் கழித்து பவன் கல்யாண் திரையில் தோன்றவுள்ளார். இன்னும் 10-15 நாள்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. அஜித் நடித்து வரும் வலிமை, மிகப்பெரிய ஆக்‌ஷன் படம். இது அஜித்தின் 60-வது படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Spread the love

Leave a Reply