பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவு: மத்திய அரசு

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை(மே 31) முதல் 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 5வது கட்டமாகஜூன் இறுதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துமத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் கல்வி நிறுவனங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாவது:

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசித்து கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆலோசிக்கலாம். இதன் மூலம் பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், கல்வி நிறுவங்களை திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவுஎடுக்கப்படும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நடைமுறைகளை, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் உள்துறை அமைச்சகம் ஆலோசித்து அதற்கான நடைமுறைகளை தயாரிக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply