ஜூலை 1ம் தேதி பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு திட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் பள்ளிகளை திக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில பள்ளி க்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகாவில் 4 முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகளை ஜூலை1-ம் தேதியும், 1 முதல் 3-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஜூலை 15-ம் தேதியும், மழலையர் பள்ளிகள் ஜூலை 20-ம் தேதியும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வரும் 5-ம் தேதி பள்ளிகளை திறந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 8-ம் தேதி முதல் பள்ளியில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதி தரப்படும்.
பள்ளிகளை திறக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 10 முதல் 12-ம் தேதிக்குள் பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்டு அறிக்கை அனுப்பவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply