‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்

வாஷிங்டன்:அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ’நாசா’ உருவாக்கிய, ‘வென்டிலேட்டர்’களை, அதற்கு தயாரித்து வழங்குவதற்கான உரிமத்தை, மூன்று இந்திய நிறுவனங்கள் பெற்றுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக நோயுற்றவர்களுக்காக, நாசா அமைப்பு, பிரத்யேகமாக இந்த வென்டிலேட்டரை வடிவமைத்துள்ளது. இந்த வென்டிலேட்டர்களை தயாரித்துக் கொடுக்கும் உரிமத்தை, இந்தியாவிலுள்ள மூன்று நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் தவிர, மேலும், 18 நிறுவனங்களுக்கும் அதற்கான உரிமையை, நாசா வழங்கி உள்ளது.

இவற்றில் எட்டு, அமெரிக்காவை சேர்ந்தவை. மூன்று, பிரேசிலை சேர்ந்தவை.இந்தியாவில், ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ், பாரத் போர்ஜ், மேதா செர்வோ டிரைவ்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.நாசா வடிவமைத்திருக்கும் இந்த வென்டிலேட்டர், வழக்கமான வென்டிலேட்டர்களைப் போல அல்லாமல், மிகவும் எளியதாக இருக்கும்.மருத்துவ களப்பணிகளின் போதும் எடுத்து சென்று பயன்படுத்தும் வகையில் இவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

Spread the love

Leave a Reply