இன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி: இன்போசிஸ் தலைமை நிர்வாகி சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனம் இன்போசிஸ், இதனை நிறுவியர் என்.ஆர். நாராயணமூர்த்தி, கடந்த 2018-ம் ஆண்டு இதன் சி.இ.ஓ.வாக இருந்த விகாஸ் சிக்கா பதவி விலகியதையடுத்து புதிய புதிய தலைமை நிர்வாகியாக (சி.இ.ஓ.வாக) சலீல் பரேக்,53 பொறுப்பேற்றார்.

கொரோனா தாக்கம் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிடைக்கவேண்டிய பிராஜெக்ட்கள் அதிகளவில் ரத்தாகியுள்ளதால் இன்போசிஸ் நிறுவனம் கடுமையாக பாதித்துள்ள கூறப்பட்டு வரும் நிலையில் இந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சலீல் பரேக்கின் சம்பளம் 27 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது தொடர்பாக எஸ்.இ.சி. எனப்படும் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தாக்கல் செய்துள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, 2019-20-ம் ஆண்டிற்கான சலீல் பரேக்கின் சம்பளம், சலுகைகள் 27 சதவீதம் அதிகரித்து 6.1 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது 2018-19 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 4.8 மில்லியன் டாலராக இருந்தது. இதில் இழப்பீடு என்பது சம்பளம், போனஸ் உள்பட இதர நீண்ட கால சலுகைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Spread the love

Leave a Reply